Video: நேரம் அமோகமா இருக்கு.. கல்யாணத்துக்கு பொண்ணு கேட்கும் ஹரிஷ் கல்யாண்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 03, 2019 06:05 PM
‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் அனிருத் பாடிய குத்து பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘பிகில்’ திரைப்படத்தின் நடிகை ரெபா மோனிகா மற்றும் டிகன்கனா சூர்யவன்ஷி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
மேலும், யோகி பாபு, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். குபேந்திரன் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘I want a Girl’ என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடலசிரியர் கு.கார்த்திக் எழுதியுள்ளார்.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்று கிடைத்துள்ள நிலையில், இப்படம் வரும் டிச.6ம் தேதி ரிலீசாகவுள்ளது.
VIDEO: நேரம் அமோகமா இருக்கு.. கல்யாணத்துக்கு பொண்ணு கேட்கும் ஹரிஷ் கல்யாண்! வீடியோ