தளபதி ரசிகர்களின் மிகுந்த் எதிர்ப்பார்க்கு இடையே, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ‘பிகில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தளபதி விஜய்யின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ‘பிகில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யின் பெயர் பிகில் என ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வரும் ஜூன்.22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கும் வெளியாகவுள்ளது.
மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்துளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அப்பா விஜய் பட்டா கத்தியுடனும், மகன் விஜய் கால்பந்து உடனும் உள்ளனர்.
தளபதி ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியாகியுள்ள ‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#Bigil pic.twitter.com/m8dpzSUDla
— Vijay (@actorvijay) June 21, 2019