500 படங்கள் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம்..! சோகத்தில் ஆழ்ந்த கன்னட திரையுலகம் | Mandeep Rai
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல கன்னட காமெடி நடிகர் மரணமடைந்துள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் மந்தீப் ராய. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இவரை இவரத குடும்பத்தினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது.
மேலும் அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது. சுமார் 73 வயதான மந்தீப் ராய், மேற்கு வங்க மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றாகினும் கூட, சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கன்னட திரையுலகில் ஆழமாக வேர் பதித்தவர்.
இந்த நிலையில் தான், நடிகர் மந்தீப் ராய் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1980 முதல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து திரையுலகில் நீங்கா புகழ்பெற்ற நடிகர் மந்தீப் ராய் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "சரவணன் நீங்க மாட்டிகிட்டீங்க..".. பரட்டை & சித்தப்பு கேரக்டர் பத்தி ரஜினி அடித்த கமெண்ட்..