3 நாட்களில் ரிலீஸ்.. தள்ளிப்போன அதர்வா படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ திரைப்படம் ரிலீசாக 3 நாட்களே உள்ள நிலையில், படத்தில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Atharvaa-Hansika's 100 film will be postponed to May 9

சாம் ஆண்டன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். அவுரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகிபாபு, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் முன்னதாக மே.3ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் ரிலீஸ் வரும் மே.9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கிராண்டாக ஒரு படமாக ரிலீஸ் செய்யும் நோக்கில் படத்தில் ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்புக் குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் அதர்வா வித்தியாசமாக போலீஸ் அதிகாரி ரோலில் நடித்திருக்கிறார்.