"அவர் இறப்புக்கு காரணம்...தயவுசெய்து வதந்திகளை பரப்பவேண்டாம்" - பிரபல மருத்துவர் வேண்டுகோள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானர். இவர் 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக சந்தானம் உடன் நடித்திருந்தார். வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரை நடிகராய் தெரிந்த பலருக்கும் இவர் ஒரு புகழ்பெற்ற தோல் மருத்துவர். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.

நடிகர் சேதுராமன் இறப்பு பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று அவரது நண்பர் வேண்டுகோள் Dont Spread Rumors Asks Pa

இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாய் விழுந்தது. இந்நிலையில் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மருத்துவரும் அவரது நண்பருமான அஷ்வின் விஜய் "அவர் இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை . அவர் மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்தார்.கொரோனாவால் இறக்கவில்லை. தயவு செய்து இந்த நேரத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor