www.garudabazaar.com

போடு வெடிய...விஷால் - S J சூர்யா நடிக்கும் புதிய PAN INDIA படத்தில் இணைந்த முன்னணி இசையமைப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விஷால் - SJ சூர்யா நடிக்கும் புதிய PAN INDIA படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளார்.

GV Prakash Kumar joined as music director of mark Anthony

விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தைப்  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் அறிவிப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த விஷால் - ஆதிக் படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரிக்கவுள்ளார். 'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார்.

GV Prakash Kumar joined as music director of mark Anthony

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாக உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதிக் அறிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும், இதர படக்குழுவினருடைய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

கமல்ஹாசனும் பஹத் பாசிலும்... இது வேற லெவலுங்கோ! வைரலாகும் விக்ரம் பட BTS புகைப்படம்

இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் S J சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை பிரத்யேக போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிசந்திரனின் முதல் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

GV Prakash Kumar joined as music director of mark Anthony

நடிகர் விஷால், அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும்“ படத்தில் நடித்து முடித்துள்ளார். கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். 

2021-ல் உலகின் மிகச்சிறந்த 25 படங்கள்... இடம் பிடித்த ஆறு இந்திய திரைப்படங்கள்!

மேலும் விஷால் நடிக்கும் 32வது திரைப்படம் லத்தி. A. வினோத்குமர் இப்படத்தை இயக்க, சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார், பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். A.வினோத்குமார் & பொன்பார்த்திபன் வசனம் எழுதுகிறார்கள். சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.

GV Prakash Kumar joined as music director of mark Anthony

GV Prakash Kumar joined as music director of mark Anthony

People looking for online information on விஷால், GV Prakash Kumar, Mark Anthony, Music Director, Pan India, S J சூர்யா will find this news story useful.