www.garudabazaar.com

சமந்தாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ரெஜினா - மருத்துவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் ஓ சொல்றியா மாமா பாடல் ஒரு முக்கிய காரணம். இந்த பாடல் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. காரணம் அந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகள் ஆண்களை இழிவு படுத்தும் விதமாக உள்ளதாக கூறி ஆண்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

actress regina dance saana kastam item song lands into trouble

ஆனால் இப்பாடலுக்கு கிடைத்த அமோக வரவேற்பால் அதெல்லாம் தவிடுபொடி ஆனது. சோஷியல் மீடியா பக்கம் சென்றால் சுட்டி குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஊ சொல்றியா மாமா பாட்டிற்கு டான்ஸ் ஆடாதவர்கள் எவரும் இல்லை. அந்த அளவிற்கு இப்பாடல் ஹிட் அடித்தது. இந்த பாடல் வரிகள் ஒரு பெண்ணின் பார்வையில், ஆண்கள் பெண்களை நோக்கிய காம எண்ணம் மட்டுமே கொண்டவர்களாக சித்தரிப்பதாக உள்ளதாக ஆந்திராவில் ஆண்கள் அமைப்பினர் இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.

பாடல் வரி சர்ச்சைகள்

actress regina dance saana kastam item song lands into trouble

தமிழ் சினிமாவில் பாடல் வரிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை அது ஒரு நீண்ட வரலாறாகவே பார்க்கப்படுகிறது. படத்தின் கெட்ட வார்த்தைகளை மட்டுமே நீக்குவதாக இருந்த காலம் சென்று. பாடல் வரிகளுக்கும் மியூட் போட வேண்டிய நிலை வந்துள்ளது. அந்தளவிற்கு யார் மனைதயும் புண்படுத்தும் நோக்கில் ஒரு சினிமா அமைந்துவிடக்கூடாது என்பதே.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... "இப்போ ரெடி" கெத்தாக அறிவித்த த்ரிஷா!

விஜய் நடித்த சர்கார் படத்தில் 'சிம்டாங்காரன்' என்ற பாடல் சர்ச்சையானது. சிம்டாங்காரான் தமிழ் வார்த்தையே அல்ல, தமிழை கெடுத்துவிட்டனர் என்று சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. சர்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.  தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் பண்டாரத்தி புராணம், சக்காளத்தி என்ற வரிகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சொல்வது போன்று உள்ளது அதனை நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து பிறகு, மஞ்சநத்தி புராணம் என மாற்றப்பட்டது.

ரெஜினா

actress regina dance saana kastam item song lands into trouble

புஷ்பா பட ஊ சொல்றியா மாமா பாடல் ஹிட்டானதால், தற்போது அது ஒரு டிரெண்டாகவே மாறியுள்ளது. அதே பார்முலாவை, தற்போது  சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி இருக்கும் ஆச்சார்யா படத்திலும் நடிகை ரெஜினா ஆடும் பாட்டும் சர்ச்சையாகியுள்ளது. 'சானா கஷ்டம்' என்கிற பாடல் ஒன்று இடம்பெற்று உள்ளது. இப்பாடலுக்கு நடிகை ரெஜினா குத்தாட்டம் போட்டுள்ளார். சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் இவர் ஆடியுள்ள நடனம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

கமல்ஹாசன் - ராஜீவ் மேனன் - தேவி ஸ்ரீ பிரசாத்!!! அடுத்த சம்பவமோ? என்னாவா இருக்கும்?...

ரெஜினா ஆடியுள்ள குத்துப்பாட்டிற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆர்எம்பி டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்தப்பாடல் வரிகளில் இன்றைய இளைஞர்கள் பலரும் ஆர்எம்பி டாக்டர் ஆக விரும்புவதாகவும், அதற்கு காரணம், அவர்களுக்குத்தான் அழகு சிகிச்சை என்ற பெயரில் சினிமா நடிகைகளின் உடலை தொட்டு மருத்துவம் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது போல வரிகள்

இடம்பெற்றுள்ளன.

actress regina dance saana kastam item song lands into trouble

பாடல் வரிகளை மாற்ற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என பல நிபந்தனைகள் விதித்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் ரெஜினாவுடன் சிரஞ்சீவியும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

actress regina dance saana kastam item song lands into trouble

People looking for online information on Acharya, Actress regina, ரெஜினா பாடல், Chiranjeevi, Saana kastam item song will find this news story useful.