குரு பாயை நினைவிருக்கா? 15 வருஷம்.. மணிரத்னம் - அபிஷேக் பச்சன் - AR - ARR-ன் மிரட்டல் கூட்டணி!
முகப்பு > சினிமா செய்திகள்குரு திரைப்படம்:- மணிரத்னம் இயக்கத்தில் 2007-ல் வெளிவந்த திரைப்படம் குரு. பத்திரிகை அச்சில் பட நடிகர்கள் பெயர்கள் டைட்டில் கார்டில் போடப்படும், “ஒரே கனா என் வாழ்விலே” என மெல்லிய குரலில் ஏ.அர்.ரஹ்மான் பின்னணி இசையில் ஒரு காவியம் போல் தொடங்கும் கதைக்களம் இலஞ்சி எனும் கிராமத்தில் தொடங்கும்.
குருநாத் தேசிகன்
வாத்தியாரின் மகனான குருநாத் தேசிகன் எனும் பெயரில் அறிமுகம் ஆகும், அபிஷேக் பச்சன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைய, ஆனால் அதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இஸ்தான்புல் போவதற்கு தயாராகிறார். அங்கு தொழில், வர்த்தக சந்தை என சகலத்தையும் அறிந்துகொள்ளும் அபிஷேக் பச்சன் தாயகம் திரும்பி, நாயகி ஐஸ்வர்யா ராயை துணைவியாய் கரம் பிடித்து, மச்சானை துணையாக கொண்டு ரயிலேறி பல கனவுகளுடன் பம்பாய் செல்கிறார்.
பம்பாய் வியாபார சந்தை
ஆனால் பெருநகரம் புதியவர்களை அவ்வளவு லேசில் ஏற்காது. அதுவும் உலக வர்த்தக முனையங்களில் ஒன்றாக திகழும் பம்பாய் வியாபார சந்தை குருவை ஏற்க மறுக்க, அதன் அமைப்பின் அடிவாரத்தை அசைக்க முற்படுகிறார் குரு. குருவின் நியாமான கனவும், கோவமும், ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க நினைக்கும் வெறியும் பிரபல நாளிதழை நடத்திவரும் நானாஜிக்கு பிடித்துப்போக, அவர் தான் குருவுக்கு உதவுகிறார்.
குரு கூட மோதணும்னா, குரு பாயா மாறனும்…
பிறகு தடையை உடைத்து , பெரியதொரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி, பெரும் தொழிலதிபராக குரு உருவெடுக்கிறார். ஆனால், அவரது நிறுவனங்கள் மீது சில நிறுவனங்களின் மோசடி புகார் கொடுத்து குருவை வீழ்த்த சூழ்ச்சி செய்கின்றன. அவற்றை எல்லாம் சந்திக்கிறார். இறுதியில், “குரு கூட மோதணும்னா, நீயும் குரு பாயா மாறனும்… ஆனா குருபாய் ஒருத்தன் தான்!” என்கிற வசனத்தை நியாயம் செய்யும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
பாவனிட்ட நீ இத பண்ணக் கூடாது! பிரியங்காவின் ஆர்டர்! அள்ளு விட்ருச்சே அமீருக்கு! BiggBoss5
நடிகர்கள்
பலதரப்பட்ட மனநிலையை வெளிப்படுத்தும் அபிஷேக் பச்சன், வசீகர நடிப்பில் அசத்தும் ஐஸ்வர்யா ராய், தேர்ந்த நடிப்பை தந்த நானா படேகர் (சுதந்திர மணி பத்திரிக்கை ஆசிரியராக), சிறப்பு தோற்றங்களில் தோன்றும் மாதவன், வித்யா பாலன் என குரு பட கதாபாத்திரங்கள் மணிரத்னத்தின் எழுத்தில் அழுத்தமான பங்களிப்பை கொடுத்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை
கதையின் இன்னொரு ஹீரோவாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. அந்த குருபாய் தீம், ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் பாடப்பெற்ற ஆருயிரே பாடல் என அனைத்துமே ஆன் ரிப்பீட் மோடில் இப்போதும் பலரது ப்ளே லிஸ்டில் இடம் பெற்றிருக்கும். இதேபோல் ஐஸ்வர்யா ராய் வீட்டை துறந்து வெளிசெல்லும்போது பாடும் நன்னாரே பாடலும் இளம் பெண்கள் மத்தியில் தெறி ஹிட்.
குரு திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள்
சரி இப்போ அதுக்கு என்ன? ஆம், குரு திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை இயக்குநர் மணிரத்னம், நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய், இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் ரசிகர்கள் தீவிரமாக சிலாகித்து பேசி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- We Will Share Success Abhishek Motivation Talk Biggboss5
- Mari Selvaraj Wishes Ar Rahman On His Birthday With Photo
- AR Rahman Joins With Mari Selvaraj In His New Movie
- AR Rahman Daughter Khatija Engaged Riyasdeen Shaik Mohamed
- Aishwarya Rai Bachchan Arrives At ED Office Panama Papers Case
- AR Rahman Shared A Video Of Ponniyin Selvan Movie
- Karthik Naren Next Film With Atharva Sarathkumar Rahman
- Thamarai Smashing Reply For Ciby Abhishek Questions
- News Task Imman Condemns Priyanka Abhishek Biggbosstamil5
- MD AR Rahman Pathiben Iravin Nizhal Movie Update
- Abhishek Advise Over Thamarai Issue Priyanka Answer BB5
- Neither Sad Nor Happy Housemate About Abhishek Elimination Entry
தொடர்புடைய இணைப்புகள்
- HEY...பக்கத்துல வா மாலை போடணும் 😍 Maalavika Sundar & Ashwin Kashyap Romantic Wedding
- MAALAVIKA SUNDAR Hubby முதுகுல உப்புமூட்டை ஏறி மஜா, Mehandi Celebration 😍
- கொளுத்துங்கடா Beat-அ 🔥😍 Wow!.. Maalavika-ஐ கட்டிபிடித்து Dance ஆடிய Ashwin Maalavika Reception
- AR Rahman Fan-ஆ நீங்க? கண்டிப்பா இந்த வீடியோ புடிக்கும்..!😍 இசை புயலின் Slow Poision Mashup💖
- 'AR ரஹ்மான் In Tears 1st Time'😍 வாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்கள்..! What An Emotional Moment❤️
- BHUMIKA 😍 தம்பி Silent-ஆ இரு, அம்மா Boat ஓட்டுறேன்ல..
- பண்ணை வீட்டில் Rest எடுத்தவரை கொத்திய பாம்பு 😱
- பட்டாளத்தோடு பட்டையை கிளப்பிய AR Rahman..! Expo 2020 Dubai
- துபாயில் ஒலித்த தமிழ்.. பட்டாளத்தோடு பட்டையை கிளப்பிய AR Rahman..! Expo 2020 Dubai
- "பாஜகவுக்கு விரைவில் கெட்ட காலம்".. சாபம் விட்ட அமிதாப் பச்சன் மனைவி..! மாநிலங்களவையில் பரபரப்பு
- 'Aishwarya Rai முதல் Messi வரை' அடுத்தடுத்து முக்கிய புள்ளிகள்? அனல் பறக்கும் பனாமா பேப்பர்ஸ் வழக்கு
- "குழந்தை பெத்துக்க வெட்கமா இல்லையான்னு கேட்டாங்க" Wheelchair-ல் அமர்ந்தே சாதிக்கும் பெண் பேட்டி