www.garudabazaar.com

பிகில் தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தில் இணைந்த யுவன்! சபாஷ் சொல்லும் மாஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் வகைமையில் வெளியான பிகில்  படத்தில் நயன்தாரா, அமிர்த அய்யர், வர்ஷா பொல்லம்மா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Music Director Yuvan Shankar Raja on board for AGS next film

அட்லி இயக்கி இருந்தார். A. R. ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டது , 'பிகில்' வெளியானதிலிருந்து, சினிமா ரசிகர்கள்  AGS நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பை எதிர்நோக்கி இருந்தனர். சில தினங்களுக்கு முன் ஏஜிஎஸ் தயாரிப்பாளர்கள் தங்களின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டனர். ‘நாய் சேகர்’ எனும் படத்தை நடிகர் சதீஷை வைத்து எடுப்பதாக அறிவித்தனர். சதிஷ் உடன் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் நாய் சேகர் படத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் சிங்கிள் பாடல் வெளியானது.

Music Director Yuvan Shankar Raja on board for AGS next film

AGS தயாரிப்பாளர்கள் தங்கள் அடுத்த அறிவிப்பாக புதிய பட்த்தை சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். இந்த படத்தில் முதன்முறையாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, யோகி பாபு மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான நகைச்சுவை பொழுதுபோக்கு படமான ' கோமாளி ' படத்தை இயக்கியவர்.

Music Director Yuvan Shankar Raja on board for AGS next film

இந்நிலையில் இசையமைப்பாளார் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் படக்குழு அறிவித்துள்ளது. AGS நிறுவனத்தின் 22வது படமாக இந்த படம் உருவாகிறது.

Music Director Yuvan Shankar Raja on board for AGS next film

இந்த படம் பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டிவிட்டரில் அறிவிக்கும் போது "பல கதைகளை கேட்ட பிறகு இந்த கதையை தேர்வு செய்ததாகவும், இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதனை அறிமுகபடுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக" தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Music Director Yuvan Shankar Raja on board for AGS next film

People looking for online information on Ags, கோமாளி, பிகில், யுவன், விஜய், Bigil, Pradeep Ranganathan, Yuvan Shankar Raja will find this news story useful.