www.garudabazaar.com

அடுத்த படமும் விஜய் சேதுபதி கூட தான்! இரண்டாவது தடவை இணைந்த நடிகை இவங்க தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பிரபல நடிகை விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இரண்டாவது முறையாக இணைகிறார்.

vijay sethupathi again share screen with biggboss actress shivani

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு சமீபத்தில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, முகில் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. விஜய் சேதுபதி நடித்து மாமனிதன், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம், மும்பைக்கர், பிசாசு2 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார்.திண்டுக்கல்லில் இந்த படத்தின் படப்பிடிப்பு சிலநாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

vijay sethupathi again share screen with biggboss actress shivani

இதில் ஐபிஎஸ் ஆக விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 23 வயதான  திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார்.இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர்.

கமல்ஹாசனும் பஹத் பாசிலும்... இது வேற லெவலுங்கோ! வைரலாகும் விக்ரம் பட BTS புகைப்படம்

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானியை மற்றொரு நடிகையாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஷிவானியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனருடன் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் ஷிவானி போலிசாக நடிக்கிறார். நடிகை ஷிவானி ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.

vijay sethupathi again share screen with biggboss actress shivani

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட், தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... "இப்போ ரெடி" கெத்தாக அறிவித்த த்ரிஷா!

vijay sethupathi again share screen with biggboss actress shivani

vijay sethupathi again share screen with biggboss actress shivani

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi again share screen with biggboss actress shivani

People looking for online information on விஜய் சேதுபதி, Biggboss actress, Shivani, Vijay Sethupathi will find this news story useful.