www.garudabazaar.com

இயக்குனர் மணிரத்னம் வெளியிட்ட ஜெயில் படத்தின் இசை! GVP பற்றி வசந்தபாலன் நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயில்'.

GV Prakash Jail Movie Audio Released by Director Maniratnam

இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார். வெயில், அங்காடித் தெரு, அரவான்,காவியத்தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ஜெயில்'. இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார்.

GV Prakash Jail Movie Audio Released by Director Maniratnam

இவர்களுடன் ராதிகா சரத்குமார், 'பசங்க' பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். சண்டைக்காட்சிகளை அமைக்கும் பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர். நடனக்காட்சிகளை சாண்டி,ராதிகா அமைத்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் கபிலன்,சிநேகன் , கருணாகரன்,தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதையை இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனும் வசனத்தை பாக்கியம் சங்கர் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். அனைத்து பணிகளும் நிறைவடைந்து, விரைவில் வெளியாக உள்ளது.  

இன்று இப்படத்தின் இசை இயக்குனர் மணிரத்னம் அவர்களால் வெளியிடப்பட்டது. இது குறித்து இயக்குனர் வசந்த பாலன் முகநூலில் நெகிழ்ச்சியான பதிவிட்டுள்ளார். அதில், ''17 வயது ஜீவியுடன் வெயில் திரைப்படத்தில் என் இசைப் பயணம் துவங்கியது. வெயிலோடு விளையாடி பாடலையும் உருகுதே மருகுதே பாடலையும் நேர்த்தியாக உருவாக்கினால் தான் மேற்கொண்டு ஜீவி உடன் நான் பயணிக்க முடியும் என்று ஒரு மாபெரும் சவால் எங்கள் முன் இருந்தது. எப்பாடு பட்டேனும் இந்த இரண்டு பாடலை மகத்தான வெற்றிப் பாடல்களாக உருவாக்க வேண்டும் என்று பகலிரவாக நானும் ஜீவிக்கும் நா.முவும் இடைவிடாது அழித்தழித்து யோசித்து அந்த பாடல்களை உருவாக்கி வெற்றி கண்டோம்.

GV Prakash Jail Movie Audio Released by Director Maniratnam

இன்று திரும்பிப் பார்க்கும்போது வெயிலோடு பாடலும் உருகுதே பாடலும் ரசிகர்களால் ஒரு கிளாசிக்காக பார்க்கப்படுவதைக் காணும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீவியின் மாபெரும் பலமாக நான் நினைப்பது இதயத்தை உருக்கும் மெலடி. கதைகளை பேசும் விழியருகே பாடலும், 

உன் பெயரைச் சொல்லும் போதே என்ற பாடலும் அங்காடித் தெருவில் இன்னும் காதலர்களின் கீதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஜெயில் திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணையும் போது முன்னிருக்கும் பாடலின் சாதனையை இலக்காக வைத்துக் கொண்டு ஜெயில் திரைப்படத்தில் பாடல்களை உருவாக்க அமர்ந்தோம். உருகுதே பாடலுக்கு அருகில் செல்லக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் காத்தோடு காத்தானேன் பாடல். 6 பாடல்களைக் கொண்ட ஜெயில் திரைப்படத்தின் இசை ஆல்பம் மிக அழகாக வந்துள்ளது. உங்கள் இசை ரசனை மீது பெரும் நம்பிக்கை கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம்''. என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

GV Prakash Jail Movie Audio Released by Director Maniratnam

People looking for online information on G V Prakashkumar, Jail, Maniratnam, Vasanthabalan will find this news story useful.