Udanprape others
www.garudabazaar.com

‘அழுதுவிட்ட தாமரை’.. ‘கெஞ்சிய அபிஷேக்’.. ‘சிறைக்கு போன நிரூப்’ களைகட்டிய காயின் டாஸ்க்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் தற்போது புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

அதன்படி இந்த டாஸ்கிற்கான பிக்பாஸ் ரூல்ஸை இமான் அண்ணாச்சி படித்துக் காட்டினார். அதில் “நண்பனின் பெயர் நாமினேஷனில் இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுவது போன்ற பல அரிய சலுகைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. இது பிக்பாஸ் இந்த வாரம் உங்களுக்கு கொடுக்கும் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க்.

இந்த டாஸ்க் பெயர் பஞ்ச தந்திரம். இப்பொழுது இந்த பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இந்த அருங்காட்சியத்தில் விலை மதிக்க முடியாத ஐந்து நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து நாணயங்களும் பஞ்சபூதங்களின் ஆற்றலான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானவை.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

ஒரு கண்ணாடிப் பெட்டியில் ஒரு நாணயம் என ஐந்து கண்ணாடிப் பெட்டியில் 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ள. இந்த நாணயங்களின் வல்லமையும் மதிப்பும் உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வல்லமை கொண்ட நாணயங்களை உங்கள் வசப்படுத்துவதே இந்த டாஸ்க். ஒரு நபர் எத்தனை நாணயங்களை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

ஒரு நாணயத்தை கைப்பற்றியவுடன், அந்த நபர் அவர் அருகில் இருக்கும் கேமராவின் முன்நின்று யாருக்கும் தெரியாமல் நாணயத்தை எடுத்து விட்டேன் என்று பிக்பாஸூக்கு அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உங்களுக்கு அந்த நாணயம் சொந்தமாகும். ஒருவர் நாணயத்தை எடுக்கும்போது பிடிபட்டால் அல்லது ஹவுஸ் மேட்ஸ் யாராவது பார்த்து சத்தம் போட்டு பிடித்தால் அவர் நாணயத்தை எடுத்த இடத்தில் திரும்ப வைத்துவிடவேண்டும்.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

இல்லையென்றால், உங்களுக்கு குறிப்பிட்ட காலம் பாதாள சிறை தண்டனையும் கிடைக்கும். சிறையிலிருந்து வந்ததும் மீண்டும் அந்த நபர் நாணயத்தை எடுக்க முயற்சி செய்யலாம். காலை, மதியம், இரவு என எந்த நேரத்திலும் நீங்கள் இந்த நாணயத்தை எடுக்க முயற்சிக்கலாம். இந்த போட்டிக்கு நேரம் காலம் இல்லை. பிக்பாஸில் இருந்து அறிவிப்பு வரும் வரை இந்த டாஸ்க் தொடரும். மேலும் டாஸ்க் நடக்கும்போது, இந்த டாஸ்கில் மாற்றங்களும் நிகழும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.” என கூறப்பட்டிருந்தது.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

இந்நிலையில் இந்த நாணயத்துக்காக போட்டியாளர்கள் தந்திரமாக இயங்கினர். கூட்டாகவும் தனித்தனியாகவும், வியூகங்களை வகுத்தும் செயல்பட்டனர். சிலர் உதவி செய்தனர். சிலர் நாணயங்களை எடுத்து வைத்துக்கொண்டு மற்றவரிடம் இல்லை என்பது போல் நடிக்கவும் செய்தனர். எனினும் அந்த நாணயம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்களை காப்பாற்றலாம் என்பதால், சிலர் அந்த நாணயங்களை கைப்பற்ற முயற்சித்தனர். சிலர் அபாயக் கட்டத்தில் இருக்கும் தங்களது நண்பருக்கு உதவுவதற்காக நாணயங்களை குழுவாக எடுத்து மறைத்து வைத்தனர். 

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

இந்நிலையில் இந்த காயினுக்காக அபிஷேக்கின் காலில் விழுந்து தாமரை அழுதார். அதன் பிறகு, “தாமரை அக்காவுக்கு அந்த ஒரு காயினை கொடுங்கள் ப்ளீஸ்” என அபிஷேக், வருண் மற்றும் அக்‌ஷராவிடம் சென்று கேட்க, வருண் சிரித்துக்கொண்டே மறுத்து பேசினார்.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

அதற்கு அக்‌ஷரா, “நீ கேட்டதாலேயே வருண் இப்போது தன் முடிவை மாற்றுவான்” என கூற, அங்கிருந்து அபிஷேக் நகர்ந்துவிட்டார். அவர் போன பின் அக்‌ஷரா, வயிற்றுப்பகுதியில் தான் மறைத்து வைத்திருந்த காயினை பிக்பாஸிடம் காட்டிவிட்டு தன்னிடம் ஒரு காயின் இருப்பதாக ரிஜிஸ்டர் பண்ணிவிட்டார்.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

பின்னர், “இந்த காயினை வைத்து தாமரையை காப்பாற்ற முயற்சி செய்கிறீர்களா?.. தாமரையை காப்பாற்ற பலர் இருக்கிறார்கள். நீங்கள் சின்ன பொண்ணுவை காப்பாத்தலாமே?” என பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி கேட்டடற்கு, பதில் சொன்ன பிரியங்கா, “சின்ன பொண்ணு அக்காவை நான் காப்பாத்த மாட்டேன். அவரை நானே நாமினேட் செய்திருக்கிறேன். நான் எப்படி அவரை காப்பாற்றுவேன்!” என்று கூறினார்.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

இதனிடையே ராஜூ, “இப்படி பொய் சொல்லி தான் விளையாடணுமா?” என்று அபிஷேக்கிடம் கேட்டார். மேலும், “தப்பா கேம் ஆடவேண்டாம். உடலுடன் சேர்த்து காயினை மறைத்து வைத்தால் செக் பண்ண முடியாது” என்று சிபி பாவனியிடம் எச்சரிக்கை செய்தார்.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

கடைசியாக நிரூப், தான் மறைத்து வைத்திருந்த காயினை எடுத்ததை அபினய் பார்த்துவிட, பிடிபட்ட நிரூப், முதலில் ரூல்ஸ் பேசி முரண்டு பிடித்தார்.

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

பின்னர் பிக்பாஸ் தெளிவுபடுத்தியதும், நிரூப் பாதாள சிறையில் வைக்கப்பட்டார்.

Also Read: "நம்பிடாதீங்க.. பாவனி இந்த சீசன் விஷ பாட்டில்!" .. BiggBoss5 நாடியா Exclusive பேட்டி!

தொடர்புடைய இணைப்புகள்

biggbosstamil5 coin task thamarai cries niroop got jail

People looking for online information on Abhinav, Abishek Raaja, AbishekRaaja RajuJeyamohanAksharaReddy PriyankaDeshpande, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.