www.garudabazaar.com

LATEST: பொன்னியின் செல்வன் அப்டேட்! வைரலாகும் மணிரத்னத்தின் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 

maniratnam ponniyin selvan movie bts picture went viral

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

maniratnam ponniyin selvan movie bts picture went viral

முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத் நகரங்களில் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசம் சென்றுள்ளது. அங்கு சில நாட்களுக்கு முன் ஆர்ச்சா, குவாலியர் நகரில் படப்பிடிப்பு தொடங்கியது.

maniratnam ponniyin selvan movie bts picture went viral

இந்நிலையில் ஆர்ச்சா நகரில் படப்பிடிப்பை முடித்து கொண்டு படக்குழு தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மகேஸ்வர் நகருக்கு சென்றுள்ளது. நர்மதை நதி பாயும் மகேஸ்வர் நகரில் கார்த்தி-த்ரிஷா நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக அறியப்படுகிறது.

maniratnam ponniyin selvan movie bts picture went viral

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் - குந்தவை சம்பந்தப்பட்ட பழையாறை அத்யாயம் இங்கு படமாக்கப்படுகிறது என அவதானிக்கப்படுகிறது. இதனை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில் மகேஸ்வர் நகர அகில்யா கோட்டையை படம் பிடித்துள்ளார்.

maniratnam ponniyin selvan movie bts picture went viral

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார். ரவி வர்மனும் தன் பங்கிற்கு இயக்குனர் மணிரத்னத்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து "பொன்னியின் செல்வன்" படத்தை தயாரிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

maniratnam ponniyin selvan movie bts picture went viral

People looking for online information on Mani Ratnam, Ponniyin Selvan, Trisha Krishnan will find this news story useful.