www.garudabazaar.com

இயக்குனர் மணிரத்னமும் DOP ரவிவர்மனும்! பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 

ponniyin selvan maniratnam shooting spot bts picture went viral

முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், ஆர்ச்சா, குவாலியர், மகேஸ்வர் நகரங்களில் நடந்தது. சமீபத்தில் நடிகர் ரகுமான், ஜெயம் ரவி ஆகியோர் தங்களது படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

ponniyin selvan maniratnam shooting spot bts picture went viral

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இயக்குனர் மணிரத்னத்துடன் எடுத்த படப்பிடிப்பு தள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ரவி வர்மன் தினமும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

ponniyin selvan maniratnam shooting spot bts picture went viral

People looking for online information on Mani Ratnam, Ponniyin Selvan, Ravi Varman will find this news story useful.