www.garudabazaar.com

அப்படி போடு!!.. BiggBoss Set-ல GP முத்துவா? .. இணையத்தில் trend ஆகும் ‘செம்ம’ Viral ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களாக நடந்து முடிவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். 4வது சீசனில் ஆரி வெற்றி பெற்றார்.

GP muthu on BiggBoss Set viral pic ஜி.பி.முத்து பிக்பாஸ்

இந்நிலையில்தான், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக கமல்ஹாசன் பேசும் புதிய டீசர் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபலங்களின் பெயர்கள் ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில், பிரபல யூடியூபரான ஜி.பி.முத்துவின் பெயரும் இந்த பேச்சுகளில் இடம் பெற்றது.

யூடியூபில் தனக்கு வந்த கடிதங்களை வெள்ளந்தியாக வாசித்து தனக்கே உண்டான வட்டார வழக்கு மொழியில் பதில் கமெண்டுகளை கூறுவதன் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா? என்கிற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர்களிடையே எழுந்துவந்த நிலையில் தற்போது பட்டாசாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இதனிடையே சன்னி லியோன் நடிக்கும் புதிய படத்துக்கு OMG என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ‘ஓ மை கோஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தர்ஷா குப்தா, சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

யுவன் இயக்கத்தில், ஜாவிட் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.பி.முத்து நடிப்பதாகவும் ஏற்கனவே கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: BiggBoss தமிழ் பிரபலம் .. பாடகியின் BioPic-ஐ Direct பண்றாரா?..  உண்மை என்ன? அவரே சொன்ன EXCLUSIVE பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

GP muthu on BiggBoss Set viral pic ஜி.பி.முத்து பிக்பாஸ்

People looking for online information on Biggboss, Biggbosstamil, GP MUTHU, Kamal Haasan, Sunny Leone, Trending, VijayTelevision, Vijaytv will find this news story useful.