www.garudabazaar.com

தூள் கிளப்பும் டைட்டில் லுக்.!!.. சன்னி லியோன் & தர்ஷா குப்தா நடிக்கும் படத்தின் ‘மாஸ்’ போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யுவன் இயக்கத்தில், ஜாவிட் இசையில், சன்னி லியோன் நடித்து வந்த பெயரிடப்படாத புதிய படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

sunny leone dharsha gupta starring movie title look சன்னி லியோன்

திகில் நிறைந்த இந்த காமெடி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து காமெடியன் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

குறிப்பாக இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்து நடிப்பதாகவும் ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இதனிடையே இந்த படத்தில், தான் நடிக்கும் தகவலை தர்ஷா குப்தா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக பகிர்ந்திருந்தார்.

நடிகை தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பின்னர் ஒளிபரப்பாகி வந்த ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது சன்னி லியோனின் இந்த படம் உட்பட சில திரைப்படங்களில் பிஸியாகி வருகிறார்.

இந்நிலையில் தான் படக்குழுவினர் செப்டம்பர் 1-ஆம் தேதி, சன்னி லியோன் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் அறிவிக்கப்படும் என முன்னமே கூறியிருந்தபடி, அதற்கேற்ப, சன்னி லியோன் நடிக்கும் இந்த படத்துக்கு OMG என பெயரிடப்பட்டு டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: நீண்ட நாளாக காத்திருக்கும் பட ரிலீஸ் .. மௌனம் கலைத்த நடிகர் சந்தானம்! குஷியில் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

sunny leone dharsha gupta starring movie title look சன்னி லியோன்

People looking for online information on Dharsa Gupta, Sathish, Sunny Leone will find this news story useful.