www.garudabazaar.com

BiggBoss தமிழ் பிரபலம் .. பாடகியின் BioPic-ஐ Direct பண்றாரா?.. உண்மை என்ன? அவரே சொன்ன EXCLUSIVE பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரும் இன்று பல திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிவடைந்துவிட்டன.

is suresh chakravarthy direct biopic here is the truth

இதில் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். 4வது சீசனில் ஆரி வெற்றி பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களான வனிதா, ஆரவ், ஆரி, தர்ஷன், முகின் ராவ், கவின், லாஸ்யா, ரியோ, சம்யுக்தா, சென்றாயன், ஜனனி, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் திரைப் படங்களில் பிஸியாகி வருகின்றனர்.

குறிப்பாக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த, ஆரி அடுத்தடுத்து புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு திரைப்படத்தில் போலீஸாகவும்,  ஏலியன்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இன்னொரு சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

முகின் ராவ் ‘வேலன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வர, லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிக்கும் ‘ஃப்ரண்ட்ஷிப்’ எனும் படத்தில் நடித்துள்ளார். அத்துடன் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலும் லாஸ்லியா நடித்துள்ளார். அண்மையில் கவின் நடிப்பில் வெளியான அஸ்குமாரோ பாடல் ஹிட் அடித்தது.

is suresh chakravarthy direct biopic here is the truth

இந்த நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

மிகவும் ஜாலியாக பேசும் சுரேஷ் சக்கரவர்த்தி பலருக்கும் பிடித்தமானவர்.  இதனிடையே சுரேஷ் சக்ரவர்த்தி அறிமுக இயக்குனராக களம் இறங்கப் போவதாகவும், பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தம்முடைய முதல் திரைப்படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இது தொடர்பாக சுரேஷ் சக்ரவர்த்தி அவர்களுக்கு நாம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தபோது, “யாருங்க இப்படிலாம் சொன்னா .. நான் டைரக்ட் பண்றேனா?.. இது எனக்கே புதுசா இருக்கு!!” என்று கலகலவென பேசுகிறார்.

தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி, இயக்குநர் வசந்தபாலனுடன் பணியாற்றுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிகரமான 4 சீசன்களை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் வரவிருப்பதாக சமீபத்தில் வெளியான ப்ரோமோ வைரலாகி வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

Also Read: "Survivor Show-ல" நம்ம அனிகா இருக்காங்களா? - உண்மை என்ன?.. Live-ல் அவங்களே சொன்ன பதில்.. viral ஆகும் video!

is suresh chakravarthy direct biopic here is the truth

People looking for online information on Biggboss, BiggBoss5, BiggBossSeason5, Biggbosstamil, BiggBossTamil5, Kamal Haasan, Suresh Chakravarthy, Trending, VijayTelevision will find this news story useful.