2012-ஆம் ஆண்டு பா.இரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நந்திதா ஸ்வேதா. இதற்கு முன் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தின் மூலம் திரை உலகுக்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.

அட்டகத்தி படத்துக்குப் பின் தமிழ் படங்களில் வாய்ப்புக்கள் கிடைக்கவே, தமிழில் கவனம் செலுத்தி வந்தார். எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நந்திதாவுக்கு க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், ஹோம்லி லுக்ஸ் ப்ளஸ் பாயிண்ட்ஸ்.
எந்த திரையுலகமானாலும் க்ளாம் ரோல்கள் அதிக காலம் நீடிக்காது என்பதை உணர்ந்த இவர், பெண் மையத் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.அவ்வகையில் IPC 376 என்ற ஆக்ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், ரிலீஸுக்கு தயாரானது. ஆனால் லாக்டவுன் ஆரம்பத்ததால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடங்கிவிட்டன.
இதனையடுத்து, தற்போது தமிழக அரசு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதால், நந்திதா ஸ்வேதாவின் IPC 376 படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நந்திதா ஸ்வேதா தற்போது அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதற்கு கேப்ஷனாக ஒரு வசனத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘சுய பாதுகாப்பு ரொம்ப முக்கியம். மன ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம். இதில் யாராவது சிக்கலை சந்திச்சா தயவு செய்து உங்களை முதல்ல கவனிங்க....உங்க மேல கொஞ்சம் அன்பு செலுத்துங்க, டேக் கேர்’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு வழக்கம் போல நெட்டிசன்களின் பாராட்டுகளை குவித்துக் கொண்டிருக்கிறது.