”பல தடைகளுக்குப் பிறகு”… ஜி வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ ரிலீஸ் தேதி… தனுஷ் வெளியிட்ட Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி வி பிரகாஷ் ஹீரோவாக நடித்து சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் ஐங்கரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

G V Prakash Ayngaran movie new release date

Also Read | ”KRK ஷூட்டுல Best day… விஜய் சேதுபதி மேஜிக் பண்ணிட்டார்”… விக்னேஷ் சிவன் பகிர்ந்த viral வீடியோ!

ஐங்கரன்…

ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க,  ஐங்கரன் எனும் திரைப்படத்தை  ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு தமது 2வது படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் மகிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார். 2017-ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தை காமன்மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீடு கொரோனாவுக்கு முன்பிருந்தே தாமதமாகி வந்தது.

G V Prakash Ayngaran movie new release date

ரிலீஸில் மாற்றம்…

இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவந்தன. மே 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்த படம் குறித்து படத்தின் கதாநாயகன் ஜி வி பிரகாஷ்குமார்  “பல தடைகளை கடந்து…. ஐங்கரன் படத்தின் ரிலீஸ் தேதி எனது நண்பர் தனுஷ் அறிவிக்க உள்ளார்” என கூறியிருந்தார்.இந்நிலையில் தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தனுஷ் அறிவித்துள்ளார். மே 12 ஆம் தேதி ஐங்கரன் படம் ரிலீஸாக திரையரங்குகளில் வெளியாகிறது.

G V Prakash Ayngaran movie new release date

தனுஷின் வாழ்த்து…

மேலும் “ஐங்கரன் திரைப்படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தைப் பற்றி நல்ல விமர்சனங்களைக் கேள்விப்படுகிறேன். ஜி வி பிரகாஷுக்கு வாழ்த்துகள். கடவுள் அருள்” எனக் கூறியுள்ளார். ஐங்கரன் திரைப்படம் திரையரங்க வெளியீடுக்குப் பின்னர் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

G V Prakash Ayngaran movie new release date

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

”பல தடைகளுக்குப் பிறகு”… ஜி வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ ரிலீஸ் தேதி… தனுஷ் வெளியிட்ட UPDATE வீடியோ

G V Prakash Ayngaran movie new release date

People looking for online information on Ayngaran movie, Ayngaran movie updates, G V Prakash, G V Prakash Ayngaran movie will find this news story useful.