www.garudabazaar.com

Varisu : அட.. ஆமால்ல 😍 ஆறு வருசத்துக்கு பிறகு தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆறு வருடங்களுக்கு பிறகு விஜய் ரசிகர்களுக்கு இந்த வருடம் டபுள் ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

After the decade two vijay films might releasing in same year

Also Read | விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67.. டிவிட்டரில் Bio-வை மாற்றிய பிரபல இயக்குனர்! போடு

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடித்துள்ளார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

After the decade two vijay films might releasing in same year

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேங்ஸ்டர் வகைமையில் உருவாகும் இந்த படமும் இந்த ஆண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

After the decade two vijay films might releasing in same year

இந்த 2023- ஆம் ஆண்டின் முதல் பாதியில் (பொங்கல்) வாரிசு திரைப்படமும் இரண்டாம் பாதியில் தளபதி 67 திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இந்த ஆண்டு வாரிசு படமும் தளபதி 67 படமும் ரிலீஸ் ஆனால் 6 வருடங்களுக்கு பிறகு விஜய் நடித்த 2 திரைப்படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.

After the decade two vijay films might releasing in same year

கடந்த 2017 ஆம் ஆண்டில், பைரவா & மெர்சல் திரைப்படங்கள் முறையே ஒரே வருடத்தின் பொங்கல் & தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

Also Read | துணிஞ்சா வெற்றி நமதே.. 'துணிவு' படத்தின் HD ஸ்டில்கள்.. கொலமாஸ் லுக்கில் நடிகர் அஜித்!

தொடர்புடைய இணைப்புகள்

After the decade two vijay films might releasing in same year

People looking for online information on Varisu, Vijay, Vijay films will find this news story useful.