www.garudabazaar.com

பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'GOD FATHER'.. சிரஞ்சீவி & சல்மான் கான் FANS-க்கு ட்ரீட் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிரஞ்சீவி & சல்மான் கான் நடித்த 'காட்பாதர்' படம் பிரபல OTT-யில் வெளியாக உள்ளது.

Chiranjeevi Salman Khan God Father OTT Release Date Announced

Also Read | RC15: ஆப்ரிக்க காட்டில் GYM.. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் ராம் சரண்! அசத்தல் வீடியோ

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது. 

சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஜெயம் மோகன் ராஜா இயக்கினார்.

இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Chiranjeevi Salman Khan God Father OTT Release Date Announced

இந்தப்படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆந்திரா & தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கடந்த அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது.

மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'. இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார்.  மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.

Chiranjeevi Salman Khan God Father OTT Release Date Announced

இந்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் நடிகர் சிரஞ்சீவி நடித்த 'காட்ஃபாதர்' திரைப்படம்.

பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் உருவான  காட்ஃபாதர் திரைப்படத்தை நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குனராக பணியாற்றினார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி, பிரபல நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.‌ இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

Also Read | பாரிஸ் நகர சாலைகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்... வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Chiranjeevi Salman Khan God Father OTT Release Date Announced

People looking for online information on Chiranjeevi, God Father, God Father OTT Release update, Salman Khan will find this news story useful.