RIP : பிரபல பாடகி உயிரிழந்தார்... அடுத்தடுத்து மரணிக்கும் கலைஞர்கள்.. துக்கத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா உலகத்தில் கொஞ்ச நாட்களாகவே பல துக்க நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதிலும் பல கலைஞர்கள்அடுத்தடுத்து மரணித்து வருகின்றனர். நமது தமிழ் சினிமாவிலும் இயக்குனர் விசு, நடிகர் சேதுராமன், பாடகி பரவை முனியம்மா போன்ற கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்தனர்.

பிரபல இளம் பாடகி உயிரிழந்தார் துக்கத்தில் ரசிகர்கள் Popular singer Cady groves dies due to natural reasons

அதேபோல் உலக அரங்கிலும் பல கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற இளம் பாடகி கேடி குரோவ்(Cady Groves) தற்போது இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 30. இவருக்கு உலகம் முழுவது பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

இளம் வயதில் பல சாதனைகளை செய்த அவர் இறந்த துக்க செய்தி அவரது ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஊடங்கங்களும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிவந்த நிலையில், அவரது இறப்பு இயற்கையானது தான் என்று அவரது சகோதரர் கூறியுள்ளார். "This Little Girl," "Love Actually" and "Forget You." போன்ற பாடல்கள் இவரது குரலில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor