www.garudabazaar.com

பிரபல விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜாராணி பட நடிகர் திடீர் மாரடைப்பால் மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோட்டயம்: கோட்டயம் பிரதீப் என்ற பெயரில் பிரபலமான மலையாள நடிகர் பிரதீப் கேஆர் இன்று (17.02.2022) வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61. அவருக்கு மனைவி மாயா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Malayalam Actor Kottayam Pradeep passed away due to heart attack

உலகப்புகழ் பெற்ற உலகின் மிகப்பெரிய திரையரங்கில் வெளியாகும் 'வலிமை'! செம மாஸ்

2001 ஆம் ஆண்டு தனது 40வது வயதில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பிரதீப், பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ஆரம்ப ஆண்டுகளில், அவர் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக பணியாற்றினார், முக்கியமாக அடையாளமற்ற பாத்திரங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் தோன்றினார்.

Malayalam Actor Kottayam Pradeep passed away due to heart attack

ஐ.வி.சசி இயக்கிய ஈ நாடு இன்னாலே வாரே இவரது முதல் அடையாள படம். இந்த் படத்தில் தான் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விஸ்வாசம் சிவாவின் (ஒளிப்பதிவாளராக) முதல் திரைப்படம்.

இவர் ராஜமாணிக்யம், 2 ஹரிஹர் நகர், ஆடு ஒரு பீகரா ஜீவி அணு, ஒரு வடக்கன் செல்ஃபி, லைப் ஆப் ஜோசுட்டி, குஞ்சிராமாயணம், வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில், அமர் அக்பர் ஆண்டனி, ஆதி கப்யாரே கூட்டமணி மற்றும் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் ஆகியவை இவரது சிறந்த படங்கள்.  பல்வேறு பாத்திரங்களுக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பிரதீப் வென்றுள்ளார். 

Malayalam Actor Kottayam Pradeep passed away due to heart attack

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜாராணி படங்களில் நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நாயகி த்ரிஷா கிருஷ்ணனின் சித்தப்பாவாக நடித்தவர்.

மதுரை ஜங்சன் & சென்னை மெட்ரோவில் கெத்து காட்டும் 'வலிமை'! வேற லெவல் சம்பவம்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Malayalam Actor Kottayam Pradeep passed away due to heart attack

People looking for online information on ராஜாராணி, விண்ணைத்தாண்டி வருவாயா, Kottayam Pradeep, Malayalam Actor, Raja Rani, Vinnaitandi Varuvaya will find this news story useful.