ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல போஜ்பூரி நடிகையான அகன்ஷா துபே ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
அகன்ஷா துபே
அகன்ஷா, 1997ஆம் ஆண்டு, அக்டோபர் 21 அன்று உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரில் பிறந்தார். 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் போஜ்புரி திரையுலகில் அகன்ஷா அறிமுகமானார். அதன் பிறகு 'முஜே ஷாதி கரோகி', சாஜன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் தூபே ஆக்டிவாக இயங்கி வந்தார். பல லட்சக்கணக்கான மக்கள் அவரை சோசியல் மீடியாவில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
ஷூட்டிங்
இந்த சூழ்நிலையில் திரைப்பட படப்பிடிப்பிற்காக வாரணாசி நகருக்கு சென்றிருக்கிறார் தூபே. அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய அவர் அங்கிருந்து ஷூட்டிங்கிற்கு சென்றுவந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் தூபே தனது அறையை விட்டு வெளியே வராததால் ஹோட்டல் பணியாளர்கள் சந்தேகமடைந்திருக்கின்றனர். அப்போது, அவர்கள் கதவை தட்டியும் எவ்வித சலனமும் இல்லை. இதனால் மாற்று சாவியை கொண்டு கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது தூபே மரணமடைந்திருந்தது தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்திருக்கின்றனர்.
விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் இது குறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர். தூபே தனது உயிரை மாய்த்துக்கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
நேற்று இரவு கண்ணாடி முன்னர் நடனமாடும் வீடியோவை அவர் கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று மர்மமான முறையில் அவர் உயிரிழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.