www.garudabazaar.com

காரைக்குடிக்கு வந்துட்டாரா? கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

famous malayalam actor joined in vikram shooting

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

famous malayalam actor joined in vikram shooting

சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடி சென்றுள்ளது. காரைக்குடியில் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. அதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை ஷிவானி இன்று ஆகஸ்ட் -24 முதல் காரைக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். 

famous malayalam actor joined in vikram shooting

இந்நிலையில் நடிகர் நரேன், கைதி படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்கிறார். இன்று விக்ரம் படப்பிடிப்பில் அவர் இணைந்து கொண்டார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசனுடன் அவர் எடுத்த படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Narain Ram (@narainraam)

தொடர்புடைய இணைப்புகள்

famous malayalam actor joined in vikram shooting

People looking for online information on Fahad Fazil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Naren, Vijay Sethupathi will find this news story useful.