www.garudabazaar.com

பிக்பாஸ் போட்டியில் கலக்க வந்த வாய்ப்பு.. 'திட்டவட்டமாக நிராகரித்த இளம் நடிகை'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகை, பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். 

பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த நடிகை | Famous actress chahat pandey reject invitation for bigg boss 14

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ - பிக்பாஸ். 100 நாட்கள் ஒற்றை வீட்டுக்குள் பிரபலங்களுடன் நடக்கும் இந்த ஷோ ரசிகர்களை கவர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் அடியெடுத்து வைத்து கொண்டிருக்கிறது. இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஹிந்தியில் பிக்பாஸ் 14-வது சீசனுக்காக வேலைகள் ஆரம்பாகியுள்ளன. இதனிடையே ஹிந்தியில் இளம் சீரியல் நடிகையாக கலக்கி வரும் சஹத் பாண்டே என்பவரை இப்போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது பிக்பாஸ் குழு. ஆனால், நடிகை சஹத் பாண்டே அதை நிராகத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''இப்போது நான் முழுவதுமாக சீரியலில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறேன். அதனால்தான் பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்தேன். இன்னும் 2 வருடங்களுக்கு பிறகு, என்றால் பார்க்கலாம்'' என தெரிவித்துள்ளார் சஹத் பாண்டே. 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த நடிகை | Famous actress chahat pandey reject invitation for bigg boss 14

People looking for online information on Biggboss, Chahat Pandey will find this news story useful.