Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

EXCLUSIVE: "பிரேம்ஜி" கமிட் ஆயிட்டாரா? சொல்லவே இல்ல.. போட்டோ-ல இருக்குறது யாரு? - அவரே சொன்ன விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தனது காதல் குறித்த வதந்திகளுக்கு பிரேம்ஜி நமது Behindwoods சேனலுக்கு விளக்கமளித்துள்ளார். 

exclusive Premji amaren denied his love with singer Vinaita

பிரபல OTT-க்கு ஹன்சிகா - சாந்தனு நடிக்கும் புதிய வெப் - சீரிஸ்! BTS Image உடன் வெளியான Update!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் வலம் வருபவர் பிரேம்ஜி அமரன். பல படங்களில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி நடிகராக எல்லா படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார். 42 வயதாகும் பிரேம்ஜி அமரன் இதுவரை திருமணம் செய்யாமல் செம ஜாலியாக, முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

exclusive Premji amaren denied his love with singer Vinaita

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி வினைத்தாவும் பிரேம்ஜியும் காதலித்து வருவதாக பல செய்திகள் உலா வந்தன. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாடகி வினைத்தா பிரேம்ஜி அமரனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு "உன் கண்களில், நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி, நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்" என பதிவிட்டு இருந்தார்.

exclusive Premji amaren denied his love with singer Vinaita

இந்த பதிவால் இருவருக்கும் காதல் என செய்திகள் காட்டுத் தீயாய் பரவின. இது குறித்து நடிகர் பிரேம்ஜி அமரனை நமது Behindwoods சேனல் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது “Fake நியூஸ், நான் மொரட்டு சிங்கிள் தான்!, BBC ல நான் கமிட்டட்னு நியூஸ் வந்தா கூட நம்பாதீங்க. நான் எப்பவுமே சிங்கிளா இருக்க போறேன். பிரண்ட்ஸ் கூட போட்ற போட்டோவை வச்சு Fake News போட்றாங்க"  என பிரேம்ஜி விளக்கமளித்துள்ளார்.

பிரேம்ஜி தற்போது சிவகார்த்திகேயனுடன் SK20 படத்தில் நடிக்க உள்ளார். இதுவரை சூரி, சதீஷ் ஆகியோரிடம் இணைந்து படங்களில் நடித்துள்ளார். முதன் முறையாக தெலுங்கு - தமிழில் உருவாகும் இந்த படத்தில் பிரேம்ஜியுடன் நடிக்க இருப்பது கோடம்பாக்கம் வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் நாளை (10.02.2022) முதல் துவங்குகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் நாளை காரைக்குடி செல்ல உள்ளார். நடிகர் பிரேம்ஜி அமரன் பிப்ரவரி 13 அன்று படக்குழுவுடன் இணைய உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஜாப் விவகாரம்: தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது - கமல்ஹாசன் பரபர டிவீட்

EXCLUSIVE: "பிரேம்ஜி" கமிட் ஆயிட்டாரா? சொல்லவே இல்ல.. போட்டோ-ல இருக்குறது யாரு? - அவரே சொன்ன விளக்கம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

exclusive Premji amaren denied his love with singer Vinaita

People looking for online information on பாடகி, பிரேம்ஜி, Love, Premji, Premji amaren, Single, Vinaita Sivakumar will find this news story useful.