www.garudabazaar.com

திடீரென வெளியேறிய சனம்... முன்னாள் பிக்பாஸ் நடிகை வெளியிட்ட பதிவு... "இது கொஞ்சம் கூட.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

Ex Biggboss contestants oppose sanam eviction

இந்நிலையில் இதுபற்றி முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான அபிராமி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "சில சமயங்களில் இந்த மாதிரி டிவி நிகழ்ச்சிகள் நியாயம் இல்லாமல் இருக்கின்றன. தகுதியான போட்டியாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஏன் இப்படி நியாயம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் நடிகை கஸ்தூரி "நியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி  விளையாடப்படும்  ஒரு Game என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு  வரவும். மிக்ஸ்ச்சர்  பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து  மத்தவங்களுக்கு  கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா ? என்று கூறியுள்ளார்.

திடீரென வெளியேறிய சனம்... முன்னாள் பிக்பாஸ் நடிகை வெளியிட்ட பதிவு... "இது கொஞ்சம் கூட.." வீடியோ

Ex Biggboss contestants oppose sanam eviction

People looking for online information on Biggboss4tamil, Sanam will find this news story useful.