www.garudabazaar.com

இந்தியளவில் ட்ரெண்டிங் 'ஹைலைட்டே' அதுதான்... கொண்டாடும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த சீசனின் நியாயமற்ற வெளியேற்றம் என ரசிகர்கள் பிக்பாஸை விமர்சனம் செய்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக சனம் நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். கமல் அவர் பெயரை சொன்னதும் சக போட்டியாளர்களே நம்ப முடியவில்லை என ஆச்சரியம் அடைந்தனர். பாலாஜி, ஆரி ஆகியோருக்கு அடுத்தபடியாக தன்னுடைய விளையாட்டை தானே விளையாடியவர்.

Bigg Boss told All the Best for Sanam Shetty, Twitter Reacts

கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் என்பதால், சனமின் இந்த வெளியேற்றம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் ஓவியா போல ரசிகர்களின் அன்பை அவர் சம்பாதித்து விட்டார். இதற்கு மேல் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சனம் வெளியேறிய போது போட்டியாளர்கள் அனைவரும் அவரை கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர். மேலும் அனைவரும் அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி வாழ்த்தினர். இதைப்பார்த்து பிக்பாஸும் உருகி விட்டார் போல. அவரும் சனமை அழைத்து ஆல் தி பெஸ்ட் கூறினார். இதைக்கேட்டு வேற என்ன வேணும் என சனம் உற்சாகத்தில் துள்ளி குதித்தார். தமிழ் நல்லா பேசுறீங்க என கமலும், சனமை பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

இந்தியளவில் தற்போது #Sanam ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss told All the Best for Sanam Shetty, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.