www.garudabazaar.com

"என் கல்யாணம் இந்த வருஷம் ஒன்னும் இல்ல, நான் சிங்கிள் தான்".. மனம்திறந்த எதிர்நீச்சல் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலங்கள் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் இயக்குனர் திருச்செல்வம். சுமார் 6 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான இந்த தொடரில், நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Ethirneechal actress Madhumitha about her marriage exclusive

பட்டையைக் கிளப்பும் எதிர்நீச்சல்

இவருடன் தீபா வெங்கட், மஞ்சரி, அஜய் கபூர், சத்யப்ரியா, அபிஷேக் சங்கர், ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலரும் கோலங்கள் தொடரில் நடித்திருந்தனர். தமிழ் சீரியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு தொடராக கோலங்கள் பார்க்கப்படும் சூழலில் இந்த தொடரில் நடித்த அனைவரையும் ரசிகர்கள் தற்போது பார்த்தாலும் டக்கென கோலங்கள் தொடரின் நினைவலைகளுக்கு சென்று விடுவார்கள். அந்த அளவுக்கு பலரின் நெருக்கமான தொடர்களில் ஒன்றாகவும் கோலங்கள் அமைந்திருந்தது.

Ethirneechal actress Madhumitha about her marriage exclusive

Images are subject to © copyright to their respective owners

கோலங்கள் தொடரை இயக்கி இருந்த திருச்செல்வம், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மனம் திறந்து பேசிய நடிகை மதுமிதா..

அது மட்டுமில்லாமல், தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் தொடராகவும் எதிர்நீச்சல் இருப்பதால், தொடர்ந்து இந்த தொடரில் வரும் காட்சிகள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசியும் வருகின்றனர்.

Ethirneechal actress Madhumitha about her marriage exclusive

இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், எதிர்நீச்சல் தொடர் குறித்து பல விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அதே போல, குறிப்பாக நடிகர் மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் வரும் குணசேகர் தொடர் மூலம் மக்கள் மத்தியில் வைரல் ஆகி வருவது குறித்தும் அவருடனான நட்பு குறித்தும் பல விஷயங்களையும் மனம் திறந்து பேசி இருந்தார் நடிகை மதுமிதா.

கல்யாணம் எப்போ?..

இந்த நிலையில், தனது திருமணம் குறித்து மதுமிதா பேசிய விஷயங்களும் அதிக கவனம் பெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டு நடிகை மதுமிதா திருமணம் செய்து கொள்ளப் போவது பற்றி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆன விஷயத்தை கேள்வியாக எழுப்ப, இதற்கு பதில் சொன்ன நடிகை மதுமிதா, "அது நான் ரீல் பண்ணது வேற, அவங்க நெனச்சது வேற. 2023 ல கல்யாணம் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க. நான் சிங்கிளா இருக்கேன், எங்கடா கல்யாணம் ஆகும்ன்னு சொல்லி இருந்தேன், அவ்ளோதான்.

Ethirneechal actress Madhumitha about her marriage exclusive

Images are subject to © copyright to their respective owners

இன்னும் இல்லைங்க, நான் இப்பவும் குழந்தை. இப்போ வேணாம். இன்னும் நிறைய டைம் இருக்கு" என தெரிவித்தார்.

"என் கல்யாணம் இந்த வருஷம் ஒன்னும் இல்ல, நான் சிங்கிள் தான்".. மனம்திறந்த எதிர்நீச்சல் நடிகை வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ethirneechal actress Madhumitha about her marriage exclusive

People looking for online information on EthirNeechal Serial, Madhumitha will find this news story useful.