www.garudabazaar.com

"அப்படி சொல்றவங்க மூஞ்சிலயே அடிக்கணும்.." பிரபல சீரியல் நடிகர் ஆவேச போஸ்ட்.. பின்னணி என்ன??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று 'என்றென்றும் புன்னகை'.

endrendrum punnagai serial actor nithin transformation insta post

காஜல் அகர்வால்.‌. பெரிய நிறுவனத்துக்காக.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ ஷூட்.. வீடியோ

இந்த தொடரில், 'தென்றல்' என்னும் முதன்மை கதாபாத்திரத்தில் நாயகி நக்ஷத்ரா, 'ஆர்ஜே'வாக நடித்து வருகிறார். மேலும், ஆகாஷ் என்னும் கதாபாத்திரத்தில் நிதின் என்பவர் நடித்து வருகிறார்.

இந்த தொடரின் ஆரம்பத்தில், தென்றல் மற்றும் ஆகாஷ் ஆகியோருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

பாட்டியின் சதி திட்டம்

ஆனால், ஆகாஷின் பாட்டி செய்த சதி வேலைகள் காரணமாக, அதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட தென்றல், தன்னுடைய திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார் தென்றல். இதன் பிறகு, சித்தார்த் என்பவரை தென்றல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தென்றலின் தங்கையை ஆகாஷ் திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து, நான்கு பேரும் ஒரே வீட்டில் தம்பதிகளாக வசித்தும் வருகின்றனர். இவர்களுக்கு இடையே இனி என்னென்ன குழப்பங்களை உண்டு பண்ணலாம் என்ற எண்ணத்தில், ஆகாஷின் பாட்டி பல தீய திட்டங்களையும் ஒரு பக்கம் தீட்டி வருகிறார்.

நாயகனின் 'Transformation'

இப்படி பல்வேறு திருப்பங்களுடன், மற்ற சீரியல்களைப் போல 'என்றென்றும் புன்னகை' தொடரும், மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில், ஆகாஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகன் நிதினின் 'Transformation' குறித்த புகைப்படங்கள் தான், தற்போது இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

endrendrum punnagai serial actor nithin transformation insta post

இன்ஸ்டா பதிவு

பொதுவாக, இந்த சீரியலிலும் சற்று ஜிம் பாடியுடன் ஃபிட்டான ஒரு ஆளாக தான் நிதின் தோன்றி செல்கிறார். இந்நிலையில் தான், தன்னுடைய பழைய புகைப்படத்தை ஒரு பக்கமும், தற்போது  இருக்கும் புகைப்படத்தை இன்னொரு பக்கமும் வைத்து, இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேப்ஷனில் சொன்னது என்ன?

இதில், ஒரு பக்கம் சற்று தடித்த ஆள் போல தோன்றும் நிதின், புதிய புகைப்படத்தில் மிகவும் ஃபிட்டாக தோன்றுகிறார். மேலும், தன்னுடைய முகத்தின் எடையை எப்படி உடல் எடையுடன் சேர்த்து குறைத்தார் என்பது பற்றியும், உடலிலுள்ள ஒரு பாகத்தின் எடையை மட்டும் குறைக்க முடியாது என்றும், அப்படி குறைக்க முடியும் என வலியுறுத்தும் நபர்களையே ஸ்டீல் சேர் கொண்டு முகத்திலேயே அடிக்க வேண்டும் என்றும், தன்னுடைய கேப்ஷனில் நிதின் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் கருத்து

அதே போல, உடலின் எடையை குறைக்க குறைக்க தான், முகத்தின் சதையையும் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதினின் 'Transformation' தொடர்பான புகைப்படங்கள் குறித்து, என்றென்றும் புன்னகை தொடரின் ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

வேற‌ லெவல்.." பாரதி கண்ணம்மா'ல நடக்க போகும் ட்விஸ்ட்? ஹேமா சொன்னது என்ன?

 

தொடர்புடைய இணைப்புகள்

endrendrum punnagai serial actor nithin transformation insta post

People looking for online information on Actor nithin, Endrendrum Punnagai, Endrendrum punnagai serial, Endrendrum punnagai serial episode, Zee Tamil will find this news story useful.