www.garudabazaar.com

'ஷாக்' ஆன ரசிகர்கள்!.. பிரபல சீரியலின் இந்த கேரக்டரில் இனி நடிக்கப் போவது இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் சீரியல்களுள் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் செம்பருத்தி.

Sembaruthi Zee Tamil Actress changed செம்பருத்தி

கார்த்திக் மற்றும் ஷபானா நடித்துக்கொண்டிருந்த இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்புதான் கார்த்திக்கிற்கு பதிலாக Behindwoods யூடியூப் சேனலின் பிரபல விஜே அக்னி, ஹீரோவாக களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இந்த சீரியலில், அகிலாண்டேஸ்வரியாக நடிகையும், செந்தூரப்பூவே சீரியல் நடிகர் ரஞ்சித்தின் மனைவியுமான ப்ரியா ராமன் நடித்து வருகிறார். இவரது இரண்டாவது மருமகளாக இந்த சீரியலில் வரும் கேரக்டர் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் தாயாரான கங்கா எனும் வேடத்தில்தான், நடிகை ராணி இதுவரை நடித்துக்கொண்டிருந்தார். இவர்தான் தற்போது மாற்றப்பட்டு, அவருக்கு பதில் பிரபல நடிகையான உஷா எலிசபெத் இணைந்திருக்கிறார்.

நடிகை உஷா எலிசபெத் கனா காணும் காலங்கள், பிரியமானவள்,  அனுபல்லவி, ஒரு மனிதனின் கதை, கலாட்டா குடும்பம், வாணி ராணி  ஆகிய சீரியல்களின் மூலம் புகழ்பெற்றவர். இதேபோல் நவீன சரஸ்வதி சபதம், வென்று வருவான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

செம்பருத்தி சீரியலில் செம்பருத்தியாக நடிக்கும் ஷபானாவின் நிஜ வாழ்க்கையில் திருமணம் நடக்கவிருக்கும் சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆம், நடிகை ஷபானா தன்னுடைய காதலர் ஆர்யன் என வெளிப்படையாகவே பல்வேறு சாட் மற்றும் ஆடியோக்களில் பேசியவை பிரபலமானது.

மேலும் ஏற்கனவே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஆர்யன் பகிர்ந்த புகைப்படத்தில், ஆர்யன் மறறும் ஷபானாவின் கைகளில் இருந்த மோதிரம் உறுதி செய்திருந்தது.

இந்நிலையில் இவர்களின் அதிகாரப்பூர்வ திருமணம் குறித்த அந்த குஷியான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read: அடடா..!! 1140 எபிசோடுகளை கடந்த பிரபல சீரியல்.. விரைவில் முடியப் போகும் சோகத்தில் ரசிகர்கள்!

Sembaruthi Zee Tamil Actress changed செம்பருத்தி

People looking for online information on Sembaruthi, ZeeTamil will find this news story useful.