“இந்த 2 சீரியல்களை நிறுத்துறோம்!” - பிரபல தமிழ் சேனல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்ஜீ தமிழில் சர்வைவர் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக தொடங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் பிரபலங்கள் பலரும் பங்கேற்கின்றனர். பல்வேறு டாஸ்குகளை கொடுத்து மிகவும் சீரியசான முறையில் இந்த ரியாலிட்டி ஷோ நடந்துகொண்டு வருகிறது. இரவு 9.30 மணிக்கு இந்த ஷோ தொடங்குவதால், இந்த நேரங்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல்களின் நேரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன.
அவற்றுள் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ராஜகுமாரி சீரியல்கள் முக்கியமானவை. இந்த நிலையில் ஜீ தமிழ் சேனல் அதிகாரப்பூர்வமாக ஒரு முக்கிய அறிவிப்பினை அறிவித்து இருக்கிறது. அதன்படி, “அன்பார்ந்த நேயர்களே.. தொடர் ஆதரவுக்கு நன்றி.. எதிர்பாராத காரணங்களால் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய இரண்டு தொடரும் வரும் வாரங்களில் இருந்து நிறுத்தப்படவுள்ளன என்பதை தெரிவித்து கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த இரண்டு சீரியல்களின் கடைசி அத்தியாயங்கள் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி, அதாவது ஞாயிற்றுக் கிழமை அன்று ஒளிபரப்பாகும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இந்த இரண்டு சீரியல்களில் சத்யா என்கிற சீரியல் சத்யா என்கிற பெண்ணை மையமாகக் கொண்டது. இதேபோல் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலும் நாயகியை மையப் படுத்திய சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.