www.garudabazaar.com

ONAM: பிரபல OTT-யில் ரிலீஸாகும் BLOCKBUSTER 'சீதா ராமம்'.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் நடித்த 'சீதா ராமம்' படம் பிரபல OTT-யில் வெளியாக உள்ளது.

Dulquer Salmaan Sita Ramam Movie OTT Release Date Announced

Also Read | 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக கமல்ஹாசனுடன் களமிறங்கிய 3 முன்னணி நடிகர்கள்! இது வேறலெவல்!

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

தெலுங்கின் முன்னணி இயக்குனரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கியமான  வேடத்தில் நடித்துள்ளார்.

Dulquer Salmaan Sita Ramam Movie OTT Release Date Announced

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்க,  ஸ்வப்னா சினிமா நிறுவனம் இந்த படத்தை  தயாரித்திருக்கிறது.

பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார் கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

Dulquer Salmaan Sita Ramam Movie OTT Release Date Announced

1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த 'சீதா ராமம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு,  தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்த திரைப்படம் 5 வாரங்களில் 75 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.‌  விரைவில் மீண்டு இந்த படம் 100 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dulquer Salmaan Sita Ramam Movie OTT Release Date Announced

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுபாஸ்கரனின்  லைக்கா புரொடக்ஷன்ஸ்   நிறுவனம் கைப்பற்றி தமிழகத்தில் ரிலீஸ் செய்தது.

Dulquer Salmaan Sita Ramam Movie OTT Release Date Announced

இந்நிலையில் இந்த படம், வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக இருக்கிறது.

Also Read | BIGG BOSS சீசன் - 6.. கமல்ஹாசன் தோன்றும் புதிய டீசர் வீடியோ! கமல் பேசுற "பஞ்ச்" தான் ஹைலைட்!

Dulquer Salmaan Sita Ramam Movie OTT Release Date Announced

People looking for online information on Dulquer salmaan, Sita Ramam, Sita Ramam Movie OTT Release will find this news story useful.