’Flying kiss is allowed!’ கொரோனாவை தடுக்க பிரபல ஹீரோ பகிர்ந்த முக்கியமான வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹீரோ, இயக்குநர், கவிஞர், வசனகர்த்தா என்று பல்வேறு அவதாரங்கள் எடுத்தவர் பார்த்திபன். ஏறத்தாழ 35 ஆண்டுகள் சினிமாவில் இயங்கி வருகிறார். ’புதிய பாதை’ படத்தில்  தொடங்கிய இவர் பயணம் புதியப்புதிய பரிமாணங்களை அடைந்து வருகிறது.

போன ஆண்டு இவர் உருவாக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.  இதைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக உருவாக்கும் இரவின் நிழல் திரைப்படத்தின் பணிகளில் முன்பே ஈடுபட்டிருந்தார்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து குவாரண்டைனை கடைபிடித்துவரும் அவர் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கொரோனாவை எப்படி சமூக இடைவேளையால் தவிர்க்கப்படும் என்பதை விளக்கும் அந்த வீடியோ வார்த்தைகளே இல்லாமல் எளிமையாக விஷயத்தை விளங்கப்பண்ணும்படி உள்ளது.  வீடியோவுக்கு ’நீடித்த உறவுக்கு .... தற்காலிக விலகல் உவந்தது! Flying kiss is allowed!’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் பார்த்திபன்.

Entertainment sub editor