சீனுக்கு சீன் பதட்டம்.. மாஸ்டர் நடிகருடன், அட்லீயின் அடுத்தப் படம்.. திகிலான TRAILER வெளியானது..!
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற பல படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய உயரங்களை அடைந்துள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் தாயரிப்பாளராக தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே தனது A for Apple Productions மூலம் ஜீவா நடித்த 'சங்கிலி புங்கிலி கதவ திற' என்ற படத்தை தயாரித்து இருந்தார் அட்லீ. இதனையடுத்து மூன்று வருடங்கள் கழித்து இரண்டாம் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் . அதில் கைதி மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ், கீரிடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், 'ராஜா ராணி'யில் நயன்தாராவின் தோழியாக நடித்த மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோரை வைத்து தயாரிக்கும் இந்த படத்திற்கு 'அந்தகாரம்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இதனை சுசி சித்தார்த் இயக்க. திரு அமுதன் ஒளிப்பதிவு செய்கிறார். அட்லீயுடன் சேர்ந்து Passion studios இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். இளம் நடிகர்களை வைத்து அட்லீ களம் இறங்கும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதுவும் கடைசி சீனில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஓடிவரும் காட்சி ஒரு சோறு பதம்..!
Here we go #ANDHAGHAARAM trailer https://t.co/0GrtULCXPx @priyaatlee @aforapple_offcl @PassionStudios_ @ Sudhans2017 @vvignarajan @iam_arjundas @vinoth_kishan @poojaram22 @MishMash2611 @pedal2go @pradeepvijay @edwinsakay @just_cut_it @DoneChannel1
— atlee (@Atlee_dir) April 14, 2020