’ஊரடங்கு முடியட்டும் நாம மீட் பண்ணுவோம்!’ - அசுரன் ஸ்டாரோடு இளம் ஹீரோயின் எடுத்த செல்ஃபி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிக்கொடி நாட்டி இந்த படம் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாக்கப்பட்டது.

Sillu Karupatti Nivedhithaa Sathish wishes Asuran Ken Karunas Happy birthday through this video | அசுரன் சிதம்பரம் கென் கருணாசுக்கு சில்லுக்கருப்பட்டி ப

சாதிய பாகுபாடுகள், பஞ்சமி நிலம் பற்றின விவாதங்களை கிளப்பிய இந்த திரைப்படம் தற்போது வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் வெர்ஷனில் சிதம்பரம் கதாப்பாத்திரத்தில் நடித்த கென் கருணாஸின் நடிப்பு பாராட்டுதலை பெற்றது.

மேலும் கென் தனது துடுக்குத் தனமான பேச்சால் அனைவரையும் ஈர்த்தபடி இருக்கிறார். இன்று அவருடைய பிறந்தநாள். இவரை வாழ்த்தி ’சில்லுக்கருப்பட்டி’  புகழ் நிவேதிதா சதீஷ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டபோது வீடியோ மோடில் போட்டு செல்ஃபி எடுத்த போது பதிவான காணொலி அது. 

அதற்கு கேப்ஷன் கொடுத்திருந்த நிவேதிதா ’பிறந்த நாள் வாழ்த்துக்கள் சின்ன டைனோசர். உன்னுடைய கனவுகள் எல்லாம் சீக்கிறமே நிறைவேறும். ஊரடங்கு முடிந்ததும் நாம் சந்திக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகை நிவேதிதா சதீஷ் சில்லுக்கருப்பட்டி படத்தில் ஏற்றிருந்த வேடம் அனைவரின் மனதையும் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இவர் நடித்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ’இறந்தாலும் ஆயிரம் பொன்’ நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தான் எடுத்த ஃபோட்டோ ஷூட் படங்களையும் தினசரி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

Entertainment sub editor