www.garudabazaar.com

"மிஸ் பண்றேன்" 😍.. மும்பையின் பிரபல உணவகத்தில் இருந்து விக்னேஷ் சிவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல உணவகத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Director Vignesh Shivan from monsoon chaat corner

Also Read | நடிகர் சிம்பு திருமணம் குறித்து.. பதிலளித்த T.ராஜேந்தர் ..!! வீடியோ

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Director Vignesh Shivan from monsoon chaat corner

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

Director Vignesh Shivan from monsoon chaat corner

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Director Vignesh Shivan from monsoon chaat corner

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Director Vignesh Shivan from monsoon chaat corner

இச்சூழலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல மான்சூன் சாட் கார்னர் உணவகத்தில் இருந்து பானி பூரி தயார் செய்யும் வீடியோவை பகிர்ந்து, "நான் என் துணையை மிஸ் பண்றேன்" என பதிவிட்டுள்ளார்.

Also Read | விக்ரம் நடிக்கும் "தங்கலான்".. பா. ரஞ்சித் பிறந்தநாளில் வெளியான புதிய BTS போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Director Vignesh Shivan from monsoon chaat corner

People looking for online information on Monsoon chaat corner, Nayanthara, Vignesh shivan will find this news story useful.