www.garudabazaar.com

"நீங்க இல்லா வாழ்க்கை".. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' சேதுராமன் குறித்து அவரது மனைவி உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் & மருத்துவர் சேதுராமனின் மனைவி உமா என்கிற உமையாள்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

Actor Dr Sethuraman wife emotional instgram post

நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் மருத்துவர் சேதுராமன்.

இதனைத் தொடர்ந்து இவர் வாலிப ராஜா, சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல்  மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தவர்.  இந்நிலையில்  கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் மருத்துவர் சேதுராமன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

Actor Dr Sethuraman wife emotional instgram post

இந்நிலையில் மருத்துவர் சேதுராமன் பயன்படுத்திய வாசனை திரவியத்தை பகிர்ந்து அவருடைய மனைவி உமா சேதுராமன் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘இன்று உணர்ச்சிமயமாக இருந்தது. நீ என் அருகில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. என்னுள் உன்னை உணரமுடியும் என்று உன்னைத் தேட ஆரம்பித்தேன். நீ இல்லாத என் வாழ்க்கையை நான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

உணர்ச்சியுடன் இருப்பது மனிதர்களுடன் சில விஷயங்களைத் தொடர்புபடுத்துகிறது. இந்த முறை உனது வாசனை திரவியம்  என்னை மீண்டும் உன்னிடம் அழைத்துச் சென்றது. வாழ்க்கை  நிச்சயமற்றது. ஆனால்  அதை மதிப்புமிக்கதாக மாற்ற முடியும். இன்று இருப்பது போல் வாழ்வோம் நேசிப்போம்... காதலுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை.... நீங்கள் நீங்களாக இருங்கள்.. உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்கவும்." என்று உருக்கமுடன் உமையாள் சேதுராமன் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uma (@uma.sethuraman)

தொடர்புடைய இணைப்புகள்

Actor Dr Sethuraman wife emotional instgram post

People looking for online information on Sethuraman, Uma Sethuraman will find this news story useful.