'என் படம் ரிலீஸ் ஆகி 3.5 வருஷம் ஆகுது, எங்க வாழ்க்கை இப்படித்தான்'' - இயக்குநர் வெங்கட் பிரபு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்களின் சமூக வலைதளபதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. மக்கள் அச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் தேவையான ஒன்றும் கூட.

கொரோனா வைரஸ் குறித்த பதிவில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெங்கட் பிரபு | Director Venkat pra

அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு, ''நம்ம வீட்டில் ஒருத்தருக்கு வந்தா தான் நாம ஒழுக்கம் கடைபிடிப்போம்னா அது ரொம்ப தப்பு. சென்னைல எல்லோரும் வெளிய தான் சுத்துறோம். நமக்கு வர சான்ஸே இல்லனு. வேண்டாம் ப்ளீஸ், தயவு செஞ்சு வீட்ல இருங்க. உங்களுக்காக இல்லனாலும் நம்ம நேசிக்கிறவங்களுக்காக வித் லவ் கொரோனா என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு ரசிகர் ஒருவர், ''தலைவா உங்களுக்கு காசு கொட்டுது. நாங்க அப்படியா சொல்லுங்க. பெர்மனன்ட் ஜாப் இல்ல. வரலனா ஜாப் இல்லனு சொல்றாங்க. என்ன தலைவா பண்றது'' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, ''பெர்மனன்ட் ஜாப்பா ? எங்களுக்கா ? என் படம் ரிலீஸ் ஆகி 3.5 வருஷம் ஆகுது. எங்களுக்கு தான் அதிகம் கணிக்க முடியாத வாழ்க்கை. பாதுகாப்பாக இருங்கள்'' என்று பதிலளித்துள்ளார்.

Entertainment sub editor