"கொரோனாவை விட இதுதான் பெரிய வைரஸ்"... நடிகர் சிபிராஜ் 'மரண மாஸ்' பதிவு.. எதை சொல்கிறார்..?
முகப்பு > சினிமா செய்திகள்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு என்றால் அது நிர்பயா வழக்கு தான். நிர்பயா என்ற இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்ற போது, கொடூரமாக கற்பழித்து கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கிற்கு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணிக்கு 4 பெரும் தூக்கில் இடப்பட்டனர்.இதுப்பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து வெளியிட்ட நடிங்கர் சிபிராஜ் "கொரோனாவை விட கொடிய வைரஸ் பெண்களுக்கு எதிரான அநீதி தான். தாமதம் ஆனாலும் கடைசியாக நீதி நிறைவேற்றப்பட்டத்தில் மகிழ்ச்சியே. கடைசியாக நீதி துறையின் மேல் இருக்கும் நம்பிக்கை உயிர்பிக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.
The biggest virus in our country is the injustice done towards women.Though delayed I’m happy that justice has been served.Finally the faith in our judicial system has been restored! #NirbhayaCase
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) March 20, 2020