பிரபல நடிகர் & இயக்குனர் T.P. கஜேந்திரன் உடல்நலக்குறைவால் மரணம்.. திரையுலகிற்கு பேரிழப்பு
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் இயக்குனர் டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.
T. P. கஜேந்திரன் பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமியின் மகன் ஆவார். இயக்குனர் மோகன் காந்திராமன், இயக்குனர் விசு ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர் கஜேந்திரன். முதல்வர் ஸ்டாலினின் கல்லூரி கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடு மனைவி மக்கள், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா எங்க ஊரு காவல்காரன், பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே ஆகிய படங்களை இயக்கியவர்.
Images are subject to © copyright to their respective owners.
டி.பி.கஜேந்திரன், நடிகராக நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று அதிகாலை டி.பி.கஜேந்திரன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 69. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.