இது இனவெறி அல்ல.. நான் யாரையும் வெறுப்பவன் அல்ல.. கொந்தளித்து சீனுராமசாமி போட்ட TWEET!
முகப்பு > சினிமா செய்திகள்காதல் படப் புகழ் பரத் சந்தியா நடித்த ‘கூடல்நகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி.
‘தென்மேற்கு பருவக் காற்று’
அந்த படம் சரியான வரவேற்பை பெறாததால் விஜய் சேதுபதியை அறிமுக நாயகானாக வைத்து ‘தென்மேற்கு பருவக் காற்று’ என்ற படத்தை இயக்கினார். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது இந்த படத்திற்கு கிடைத்தது. மேலும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு கிடைத்தது. பின்னர் ‘நீர்பறவை’, ‘தர்மதுரை’ போன்ற படங்கள் மூலம் தனது ஆசான் இயக்குனர் பாலுமகேந்திராவின் பெயரைக் காப்பாற்றினார். இவர் இயக்கி லிங்குசாமி தயாரிப்பில் இடம் பொருள் ஏவல், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் மாமனிதன் போன்ற படங்கள் சிலகாரணங்களால் வெளியிட முடியாமல் உள்ளன.
மாமனிதன்
சமீபத்தில் மாமனிதன் படத்தின் முன்னோட்டம் வெளியானது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது YSR FILMS PVT LTD-ன் கீழ் இந்த படத்தை தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.
இடி முழக்கம்
இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் சீனு ராமசாமி, ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரிப்பில் ஜீ வி பிரகாஷ் குமார், காயத்ரி நடிப்பில் இடி முழக்கம் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர் கதாபாத்திரத்தில், பள்ளி மாணவி, செவிலியர் மற்றும் ஒரு தாய் என மூன்று நிலைகளிலும் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். விப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுத, இயக்குநர் சீனு ராமசாமியுடன் 'தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நீர் பறவை' போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் NR ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் வகைமையில் (Genre) உருவாகும் இப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியான தமிழ் படங்களுக்கு போதுமான தியேட்டர் கிடைக்காமல், மற்ற மொழிபடங்களுக்கு தியேட்டர்கள் கிடைத்துள்ளன என சீனு ராமசாமி டிவிட்டரில் கூறியுள்ளார். அதில் "கேரளா கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும்போது அவர்கள் முன்னுரிமை தருவது போல தமிழ்நாட்டு படங்கள் வெளியாகும்போது தமிழ் படங்களுக்கு முதல் முக்கியத்துவம் தரவேண்டும் மாற்றுமொழி டப்பிங்& ஆங்கிலப்படங்கள் தனியாக திரையிட கால அட்டவணையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்க வேண்டும் என்றும், ஒரே நேரத்துல மூனு டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள் அதிக விளம்பரத்தோட வந்தா இங்க இருக்கிற 'ரைட்டர்' எப்படி தன்னோட வீட்ல ஆனந்தமா விளையாட முடியும்? சிலந்தி கூடு கட்டிராதா? எல்லாத்தையும் ஒரே நேரத்துல விடாம ஒவ்வொன்னா கூட விடுங்க இது பத்தி யோசிக்கலமா? அவ்வளவுதான் ஏ கேள்வி..! இது இனவெறி அல்ல
நான் யாரையும் வெறுப்பவன் அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vijay Sethupathi Seenu Ramasamy Maamanithan Teaser Is Out
- Kolasaami Will Be Released By Director Seenu Ramasamy
- Actor Gv Prakash Director Seenu Ramasamy Movie Tittle Is
- Gv Prakash Kumar Seenu Ramasamy New Movie Update
- GV Prakash Seenu Ramasamy Gayathrie Shankar Team Up Details
- GV Prakash Teams Up With This National-award Winning Director For His Next Ft Seenu Ramasamy
- Director Seenu Ramasamy Comments On Dowry Deaths
- Vijay Sethupathi Seenu Ramasamy Maamanithan மாமனிதன்
- Another Hero From Sivaji Ganeshan's Family To Debut; Popular Director Locked Ft Dharshan & Seenu Ramasamy
- Director Seenu Ramasamy Tweets That His Life Is Under Threat And Seeks Help From CM
- Popular Director Seenu Ramasamy Faces Life Threat உயிருக்கு ஆபத்து என சீனு ராமசாமி பதிவு
- Seenu Ramasamy Get Married Recently Director Clears Air
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴VIDEO: தீப்பெட்டி கணேசன்-நான் உழைச்சு சாப்பிடுறேன்..வேற யாருக்கும் பண்ணாதீங்க..|THROWBACK INTERVIEW
- தீப்பெட்டி கணேசன் மறைவு... உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் | Renigunta
- Kanne Kalaimaane Official Making Video | Udhayanidhi Stalin | Tamannaah | Seenu Ramasamy
- Kanne Kalaimaane - Photos
- Kanne Kalaimaane | List of films releasing this weekend - Slideshow
- Kanne Kalaimaane | Probable Tamil releases in February 2019 - Slideshow
- Kanne Kalaimaane | 2019 First Quarter - Expected Tamil Film Releases - Slideshow
- Kanne Kalaimaane | Tentative list of Tamil movies to release in the second half of 2018 - Slideshow
- Jallianwala Bagh Vida STERLITE Kevalam! | Seenu Ramasamy On Sterlite Issue
- SURIYA 37 With KV Anand? | AYAN 2 Possibilities? | TK 664
- Arul Doss Blasts Director Seenu Ramasamy Over Anbu Chezhian Tweet | US 134
- "First Show Cancelled For A Movie Which Won 3 National Awards" - Seenu Ramasamy - Videos