www.garudabazaar.com

G.V. பிரகாஷ் - சீனு ராமசாமி இணையும் புதிய படத்தின் மாஸான பெயர்! என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி.வி. பிராகாஷ்குமார் தனது அடுத்தபடம்  பற்றிய தகவலை டிவிட்டரில் சில நாட்கள் முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

actor gv prakash director seenu ramasamy movie tittle is

அதில் முதல்முறையாக தேசிய விருதுப்பெற்ற தென் மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைவதாகவும், இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரிப்பதாகவும் அறிவித்தார். எழுத்தாளர் ஜெயமோகனும் சீனு ராமசாமியுடன் இணைந்து பணிபுரிகிறார்.

actor gv prakash director seenu ramasamy movie tittle is

கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுத, இயக்குநர் சீனு ராமசாமியுடன் 'தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நீர் பறவை' போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் NR ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

actor gv prakash director seenu ramasamy movie tittle is

இப்படத்தில் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர் கதாபாத்திரத்தில், பள்ளி மாணவி, செவிலியர் மற்றும் ஒரு தாய் என மூன்று நிலைகளிலும் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். 

actor gv prakash director seenu ramasamy movie tittle is

ஆக்சன் திரில்லர் வகைமையில் (Genre) உருவாகும் இந்த படத்திற்கு இடி முழக்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனத்துடன், நடிகர்கள் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளனர். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கார்த்தியின் 'சர்தார்', சூர்யாவின் 'வாடிவாசல்', தனுஷின் 43வது படம் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்து ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன் போன்ற படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

actor gv prakash director seenu ramasamy movie tittle is

People looking for online information on GV Prakash, Seenu ramasamy will find this news story useful.