www.garudabazaar.com

GV பிரகாஷுடன் கைகோர்க்கும் சீனு ராமசாமி.. ஹீரோயின் இவரா? அதுவும் இப்படி ஒரு கேரக்டரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி ஷங்கர் நடிக்க, Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் திரைப்படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

GV Prakash seenu ramasamy Gayathrie Shankar team up details

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி இந்த படம் அவரது வழக்கமான மெலோ டிராமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் GV பிரகாஷ் குமார் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கவுள்ள அடுத்த திரைப்படம், கிராமத்து பின்னணியில் , முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக உருவாகிறது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து, விரைவில் வெளியாகவுள்ள "மாமனிதன்" திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள காயத்திரி ஷங்கர், இப்படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். MS பாஸ்கர், கஞ்சா கருப்பு உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் நாயகி கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையின் மூன்று நிலைகளில் பயணிக்கிறது. பள்ளி மாணவி, வேலை செய்யும் பெண் மற்றும் ஒரு தாய் என இந்த மூன்று நிலைகளிலும் நடிக்கும் காயத்திரி. அவருக்கு அந்த திறமை இருக்கிறது.

GV Prakash seenu ramasamy Gayathrie Shankar team up details

இதுபற்றி பேசிய சீனு ராமசாமி, தனது முந்தைய திரைப்படங்களைப் போலவே, இப்படத்திலும் பெண் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கதையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் தேனியில் முதல் கட்ட படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், 25 நாட்கள், முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமியுடன் 'தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நீர் பறவை' போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் NR ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.

ALSO READ: வேற லெவல் டைட்டில்... ஹிப் ஹாப் தமிழா.. "சிவக்குமாரின் சபதம்" .. வெளியான  3வது சிங்கிள்!

GV Prakash seenu ramasamy Gayathrie Shankar team up details

People looking for online information on Gayathrie, GV Prakash, GV Prakash Kumar, Seenu ramasamy will find this news story useful.