''மாஸ்டர் ரிலீஸ்.. ஒரு ரசிகனா கஷ்டமா இருக்கு. ஆனா..'' - பிரபல இயக்குநர் எமோஷனல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து பிரபல இயக்குநர் உருக்கமான கருத்தை தெரிவித்துள்ளார். 

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் - பிரபலத்தின் உருக்கமான பதிவு | director rathna kumar emotional note on vijay's master release

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து மேயாதமான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''கொரோனா வைரஸ் பிரச்சனை இல்லையென்றால், மாஸ்டர் இந்நேரம் ரிலீஸ் ஆகியிருக்கும், பல சோகமான ட்வீட்டுகளை பார்க்க முடிகிறது. ஒரு ரசிகனாக இது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், உயிர் பிழைத்திருப்பதே இப்போது முக்கியம், கொண்டாட்டம் எல்லாம் பிறகு'' என பதிவிட்டு, மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் எடுத்த செல்ஃபியையும் பகிர்ந்துள்ளார். 

 

Entertainment sub editor