"மிஸ் யூ தோனி" என்னுடைய குழந்தை பருவம் நிறைவடைந்துவிட்டது நன்றி - பிரபல இயக்குநர் Emotional Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து திரை நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Director Rathana Kumar Tweet About M S Dhoni Yesterday Match

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. இதனால் புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருந்தது இந்திய அணி. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது

இதில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இதனால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது இந்திய அணி. இந்திய அணியின் தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்திய அணியின் தோல்வி குறித்து இயக்குநர் ரத்னகுமார் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் மீண்டும் ஒரு அரைசதம்.. இந்தியாவின் முதுகெலும்பு முடித்துக்கொள்கிறது. மிஸ் யூ தோனி. என்னுடைய குழந்தை பருவம் நிறைவடைந்துவிட்டது. நன்றி தோனி.. பயிற்சியாளராக விரைவில் வாருங்கள் என பதிவிட்டுள்ளார்.