''நான் விஜய்க்காக வேண்டிக்கிறேன்...'' - பிரபல இயக்குநர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 25, 2019 03:15 PM
தளபதி விஜய் நடித்துள்ள 'வேலாயுதம்' திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தை மோகன் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.
தற்போது இந்த வருட தீபாவளிக்கு விஜய்யின் 'பிகில்' திரைப்படம் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இயக்குநர் மோகன்ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய சிறந்த தீபாவளிகளில் ஒன்றாக இருந்தது. வேலாயுதம் வெளயாகி 8 வருடங்கள் ஆகிறது. இந்த சிறந்த மனிதர் நடிகர் விஜய்க்கு அற்புதமான தீபாவளியாக அமைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
My best Diwali was the one 8 years before n it’s #8yearsofdiwaliwinnervelayudham tmrw :) it’s so obvious how sincerely I wud pray n wish for this wonderful man @actorvijay to get a mega blockbuster this Diwali .. @Ags_production 👍👍 @Atlee_dir bro 👍👍 #Bigil
— Mohan Raja (@jayam_mohanraja) October 25, 2019