பிகில் வெறித்தனம்..! - மண் சோறு சாப்பிட்டு தளபதி ரசிகர்கள் வழிபாடு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 25, 2019 08:54 AM
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘பிகில்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி தளபதி ரசிகர்கள் கோவிலக்ளில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்துள்ளனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிகாலை சிறப்புக் காட்சியுடன் ரிலீசானது.
தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து ஆரவாத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில், இப்படம் வெற்றி அடைய வேண்டி, மயிலாடுதுறையில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலில் நாகை மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தளபதி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.
‘பிகில்’ படத்தின் வெற்றிக்கு மட்டுமல்லாது, நடிகர் விஜய் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் அம்மனை வழிபட்டு மண் சோறு சாப்பிட்டுள்ளனர்.