தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு இந்த தியேட்டரில் மெர்சல் ஓபனிங்..! எப்படி தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 25, 2019 01:28 PM
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பாக ரசிகர்களுக்கு மெர்சல் ட்ரீட் ஒன்றை பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து ‘பிகில்’ அடித்து தீபாவளி கொண்டாட்டத்தை பிகில் திரைப்படத்துடன் தொடங்கியுள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் தியேட்டரில், விஜய்-அட்லி காம்போவின் முந்தைய படமான ‘மெர்சல்’ படத்தில் இருந்து தளபதியின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஒவ்வொரு பிகில் காட்சிக்கு முன்பாக திரையிடப்படும் என அறிவித்துள்ளது.
ராம் முத்துராம் சினிமாஸின் இந்த அறிவிப்பு தளபதி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#BigilInRamCinemas Begins with #AalaporanTamilan 🔥 pic.twitter.com/uyMjTb48is
— Ram Muthuram Cinemas (@RamCinemas) October 25, 2019